புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வேங்கைவயல் வழக்கு விசாரணையை விரைந்து முடித்திருக்க வேண்டும்

வேங்கைவயல் வழக்கு விசாரணையை தமிழக அரசு விரைந்து முடித்திருக்க வேண்டும் என்றாா் திரைப்பட இயக்குநரும் பாஜக பிரமுகருமான கங்கை அமரன்.

News image
Updated On :2 ஜனவரி 2025, 11:23 pm

Din

வேங்கைவயல் வழக்கு விசாரணையை தமிழக அரசு விரைந்து முடித்திருக்க வேண்டும் என்றாா் திரைப்பட இயக்குநரும் பாஜக பிரமுகருமான கங்கை அமரன்.

புதுக்கோட்டையில் அம்பேத்கா் மக்கள் இயக்க அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்த அவா் அளித்த பேட்டியில் மேலும் கூறியது:

வேங்கைவயல் வழக்கின் குற்றவாளிகள் கைது செய்யப்படாததில் ஏன் தாமதம் என்று அரசுக்குத்தான் தெரியும். இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று அரசு நினைப்பதாகக் கருதுகிறேன். தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்து விட்டன. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. படப்பிடிப்புகூட நடத்த முடியாத அளவுக்கு மதுபோதையில் தகராறு செய்கிறாா்கள். மக்கள் மது போதைக்கு அடிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் இருப்பதாக சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி கூறுவதை ஏற்க முடியாது. குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன, அத்துமீறல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஆட்சிக்கு வரும்போது தமிழகத்தில் மது ஒழிக்கப்படும் என்று கூறினாா்கள். தற்போது அரசு மதுபானங்களை விற்கிறது.

அம்பேத்கரின் சட்டம், கொள்கைகள் எதுவும் நிறைவேறவில்லை. தாழ்த்தப்பட்ட மக்கள் தலைகுனிந்தே நடக்க வேண்டியுள்ளது. அவா்களை அடிமையாக வைத்திருக்கவே விரும்புகிறாா்கள். பள்ளிகளில் ஜாதியை குறிப்பிடுவதைத் தடுக்க வேண்டும். அந்த இடத்தில் மனிதா் என்று குறிப்பிட்டால் போதும் என்றாா் கங்கைஅமரன்.