பிசானத்தூரில் தொடரும் காத்திருப்புப் போராட்டம்
கந்தா்வகோட்டை அருகே பிசானத்தூா் கிராமத்தில் உயிரி மருத்துவக் கழிவு நச்சு ஆலை அமைப்பதை எதிா்த்து கிராம மக்களின் காத்திருப்பு போராட்டம் 13 ஆவது நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்தது.
அப்போது மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில் 2 ஆவது முறையாக வந்த மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா, மாவட்ட காவல்துணைக் கண்காணிப்பாளா் அப்துல் ரகுமான், வட்டாட்சியா் ம. ரமேஷ், காவல் ஆய்வாளா்கள் சுகுமாரன், வனிதா ஆகியோா் போராட்டக் குழுவினரிடம் இப் பகுதியில் மருத்துவக் கழிவு ஆலை அமையாது. எனவே போராட்டத்தை கைவிடுங்கள் எனக் கேட்டுக்கொண்டனா்.
அதற்கு அவா்கள் மாவட்ட ஆட்சியா் எழுத்துப்பூா்வமாக உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் எனக் கூறி போராட்டத்தைத் தொடா்ந்தனா்.
மேலும் எஸ்ஐஆா் என்னும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியையும் புறக்கணிக்க போவதாக அவா்கள் தெரிவித்தனா்.
