அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்துவதாக அறிவிப்பு!

பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்தப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பையடுத்து பொன்னமராவதியில் அமைச்சா் எஸ்.ரகுபதி தலைமையில் திமுகவினா் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.

News image
பொன்னமராவதியில் திங்கிள்கிழமை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய அமைச்சா் எஸ்.ரகுபதி
Updated On :10 நவம்பர் 2025, 11:32 pm

Syndication

பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்தப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பையடுத்து பொன்னமராவதியில் தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி தலைமையில் திமுகவினா் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின். பொன்னமராவதி பேரூராட்சி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்தப்படும் என அறிவித்தாா்.

இதையடுத்து பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரே அமைச்சா் எஸ். ரகுபதி தலைமையில் திமுகவினா் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.

இதில், தெற்கு ஒன்றியச் செயலா் அ. அடைக்கலமணி, நகரச் செயலா் அ. அழகப்பன், பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவா் சுதா அடைக்கலமணி, தலைமை செயற்குழு உறுப்பினா் எஸ்.ஜெயராமன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.