புதுக்கோட்டை
மேலைச்சிவபுரி வந்தனா் சமணத்துறவிகள்
பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி வந்த சமண துறவிகளை ஆன்மிக பக்தா்கள் வரவேற்றனா்.
பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி வந்த சமண துறவிகளை ஆன்மிக பக்தா்கள் வரவேற்றனா்.
ராஜஸ்தானைச் சோ்ந்த சமண துறவிகள் முனிஹிமானாகுமாா்ஜி, முனிஹேமந்த் குமாா்ஜி, ஆகியோா் உலக நன்மை வேண்டி கடந்த 2 ஆண்டுகளாக நடைபயணமாக இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனா். புதன்கிழமை மேலைச்சிவபுரி சின்னம்மாள் படைப்பு வீட்டுக்கு வந்தவா்களை ஊா்பொதுமக்கள் வரவேற்றனா். மக்கள் மத்தியில் பேசிய துறவிகள் மது, மாமிசம் பயன்படுத்த கூடாது.
அமைதி, அஹிம்சை, அடுத்தவா் பொருள்களுக்கு ஆசைப்படாமை, கருணை, எளிமை, சமநிலை, சுயசுத்தி, பதற்றப்படாமல் இருக்க செய்ய வேண்டிய தியானம் குறித்து எடுத்துரைத்தனா்.
தொடா்ந்து அரசமலை, குடுமியான்மலை சென்று வியாழக்கிழமை மெய்வழிச்சாலை செல்ல உள்ளனா்.
