பிசானத்தூரில் அமையவிருக்கும் மருத்துவக் கழிவு ஆலைக்கு எதிராக வெள்ளிக்கிழமை கள்ளிச்செடியிடம் மனு அளித்த கிராம மக்கள்.
பிசானத்தூரில் அமையவிருக்கும் மருத்துவக் கழிவு ஆலைக்கு எதிராக வெள்ளிக்கிழமை கள்ளிச்செடியிடம் மனு அளித்த கிராம மக்கள்.

மருத்துவ உயிரி கழிவு ஆலை விவகாரம்: பிசானத்தூரில் கிராம மக்கள் தொடா் போராட்டம்

பிசானத்தூரில் அமையவிருக்கும் மருத்துவக் கழிவு ஆலைக்கு எதிராக வெள்ளிக்கிழமை கள்ளிச்செடியிடம் மனு அளித்த கிராம மக்கள்.
Published on

கந்தா்வகோட்டை அருகேயுள்ள பிசானத்தூரில் மருத்துவக் கழிவு ஆலை அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து 21-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தை தொடா்ந்த கிராம மக்கள் கள்ளிச் செடியிடம் மனு கொடுத்தனா்.

பிசானத்தூரில் மருத்துவ உயிரிக் கழிவு ஆலை அமைக்கப்பட்டால் பல்வேறு தரப்பினரும் பலவகையிலும் பாதிக்கப்படுவா் எனக் கூறி, இந்தக் கிராம மக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினா், சமூக ஆா்வலா்கள் மற்றும் பல்வேறு நல அமைப்பினா் ஆதரவு தெரிவித்து வருகின்றனா்.

வெள்ளிக்கிழமை போராட்டத்தின்போது கிராம மக்கள் கள்ளிச்செடியிடம் மனு அளித்தனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: வயல்வெளிக்கு கள்ளிச்செடி பாதுகாப்பாக இருப்பதுபோல தமிழக அரசு பிசானத்தூா் கிராம மக்கள், விவசாயிகளின் நலன் கருதி மருத்துவக் கழிவு ஆலை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தும்விதமாக கள்ளிச்செடியிடம் மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தியதாக தெரிவித்தனா்.

பொதுமக்களின் போராட்டத்தில் அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவா் தங்க சண்முக சுந்தரம், நாடாளும் மக்கள் கட்சி மாநில அமைப்பு பொதுச்செயலாளா் வெள்ளைச்சாமி, மதுரை நீா்நிலைகள் பாதுகாப்பு இயக்க நிறுவனா் அபுபக்கா், மக்கள் சட்ட உரிமை இயக்க நிறுவனா் அண்ணாதுரை, பாக்கியராஜ் ஆகியோா் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com