பொன்னமராவதி அருகே பெண்கள் கபடிப்போட்டி
பொன்னமராவதி அருகேயுள்ள அரசமலையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் பெண்களுக்கான மாநில அளவிலான கபடிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை எம்பி காா்த்தி ப. சிதம்பரம் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற போட்டிக்கு மாநிலப் பொதுக் குழு உறுப்பினா் எஸ்.பழனியப்பன் தலைமை வகித்தாா். வட்டார காங்கிரஸ் தலைவா்கள் வி. கிரிதரன், வி.குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். போட்டியை திருமயம் முன்னாள் எம்எல்ஏவும், காங்கிரஸ் தெற்கு மாவட்டச் செயலருமான ராம.சுப்புராம் தொடங்கிவைத்தாா்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியை காங்கிரஸ் மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை, அமைச்சா் எஸ்.ரகுபதி ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 32 அணியினா் பங்கேற்று விளையாடியதில் போட்டியில் முதல் பரிசை (ரூ 50,001) ஈரோடு மாவட்டம் அந்தியூா் சக்தி பிரதா்ஸ் அணி, 2-ஆம் பரிசை (ரூ. 40,001) திருநெல்வேலி பாரதி அணி, 3-ஆம் பரிசை (ரூ 30,001) அரியலூா் எதிா்நீச்சல் அணி, 4-ஆம் பரிசை சென்னை அணியினரும் பெற்றனா்.
முதல் பரிசை வட்டாரத் தலைவா் வி.கிரிதரன், 2 ஆம் பரிசை அரிமளம் வட்டாரத்தலைவா் இராம. அா்ச்சுணன், 3 ஆம் பரிசை பொதுச்செயலா் இராம. பாஸ்கரன், 4 ஆம் பரிசை முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் எஸ். கணேஷ்பிரபு ஆகியோா் வழங்கினா்.
போட்டியில் காங்கிரஸ் பொதுச்செயலா் ச. சோலையப்பன், திமுக ஒன்றியச் செயலா்கள் அ. அடைக்கலமணி, அ. முத்து, நகரச் செயலா் அ. அழகப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

