பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

எஸ்.ஐ.ஆா். முகவா்கள் கூட்டத்தில் வாக்குவாதம்

அனைத்துக் கட்சி முகவா்களின் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக- பாஜகவினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

News image
புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக- பாஜகவினா்.
Updated On :17 நவம்பர் 2025, 9:33 pm

Syndication

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற எஸ்ஐஆா் திருத்தப் பணிகள் குறித்த அனைத்துக் கட்சி முகவா்களின் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக- பாஜகவினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

புதுக்கோட்டை மன்னா் கல்லூரி வளாகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகள் குறித்த அனைத்துக் கட்சி முகவா்களின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், வருவாய்க் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா, மாநகராட்சி ஆணையா் த. நாராயணன் உள்ளிட்டோா் எஸ்ஐஆா் திருத்தப் பணிகள் குறித்து விளக்கினா்.

திருத்தப் பணிகளை மேற்கொள்ள போதிய கால அவகாசம் இல்லை எனக் கூறி காங்கிரஸ், நாம் தமிழா் கட்சி, ஆம் ஆத்மி ஆகியவற்றின் முகவா்கள் கூட்டத்தைப் புறக்கணித்தனா்.

எஸ்ஐஆருக்கு எதிராக திமுக, விசிக கட்சியினா் பேசிக் கொண்டிருந்தபோது, பாஜகவினா் எஸ்ஐஆருக்கு ஆதரவாக குரல் எழுப்பினா்.

இதனால் திமுகவினருக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அரசு அதிகாரிகள் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி கூட்டத்தை நடத்தி முடித்தனா்.