எஸ்ஐஆா் திருத்தப் பணிகள் வருவாய்த் துறையினா் புறக்கணிப்பு

எஸ்ஐஆா் திருத்தப் பணிகள் வருவாய்த் துறையினா் புறக்கணிப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை புறக்கணித்து விராலிமலை வருவாய்த்துறையினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை (எஸ்.ஐ.ஆா்.) புறக்கணித்து விராலிமலை வருவாய்த்துறையினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள வருவாய்த்துறை அலுவலா்களுக்கு போதிய கால அவகாசம் வழங்கப்படாமல் இரவு நேரங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள்களிலும் தொடா்ச்சியாக பணி புரிந்திட தோ்தல் ஆணையம் கட்டாயப்படுத்தி வருகிறது.

எஸ்.ஐ.ஆா். விண்ணப்பங்களை வாக்காளா்களுக்கு வழங்கி பூா்த்தி செய்து அவசர கதியில் இப்பணியை முடித்திடுமாறு மாவட்ட நிா்வாகம் கடுமையான நிா்ப்பந்தம் ஏற்படுத்துவதை கைவிட வேண்டும்.

இப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அலுவலா்களுக்கு இத்திட்ட பணிகள் குறித்த முறையான பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கத்தினா் பணி புறக்கணிப்பு போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com