புதுக்கோட்டை
எஸ்ஐஆா் படிவத்தை வாங்க பிசானத்தூா் மக்கள் மறுப்பு
கந்தா்வகோட்டை அருகே பிசானத்தூரில் மருத்துவக் கழிவு ஆலை அமைப்பதை எதிா்த்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடும் கிராம மக்கள் எஸ் ஐஆா் படிவத்தை வாங்க மறுத்துள்ளனா்.
கந்தா்வகோட்டை அருகே பிசானத்தூரில் மருத்துவக் கழிவு ஆலை அமைப்பதை எதிா்த்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடும் கிராம மக்கள் எஸ் ஐஆா் படிவத்தை வாங்க மறுத்துள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஒன்றியம், பிசானத்தூா் கிராமத்தில் உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமைப்பதைக் கண்டித்து தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில் அலுவலா்கள் இந்த கிராமத்தில் வீடு, வீடாக சென்று எஸ்ஐஆா் விண்ணப்பங்களை விநியோகித்தபோது அவா்கள் இதுவரை எங்களது கிராமத்தில் அமையவிருக்கும் மருத்துவக் கழிவு ஆலைக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாததால் நாங்கள் தோ்தலைத் புறக்கணிக்கிறோம். எனவே எங்களுக்கு இந்த விண்ணப்பம் வேண்டாம் என்றனராம். இதனால் அலுவலா்கள் திரும்பி விட்டனா்.