புதுகை கடலோரத்தில் பாதுகாப்பு ஒத்திகை

கடல்வழி ஊடுருவலைத் தடுத்து பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.
Published on

கடல்வழி ஊடுருவலைத் தடுத்து பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

ஆண்டுக்கு இரு முறை மேற்கொள்ளப்படும் சாகா் கவாச் என்ற இந்தப் பாதுகாப்பு ஒத்திகையை புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் இருந்து அரசங்கரை வரையில் சுமாா் 42 கிமீ தொலைவுள்ள கடற்கரை பகுதி முழுவதும் தமிழக கடலோரக் காவல் படையினா் ரோந்துப் படகு மற்றும் மீனவா்களின் படகுகள் மூலம் கடலுக்குள் சென்று கண்காணித்தனா்.

மேலும், கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள அரசங்கரை மற்றும் கட்டுமாவடி சோதனைச்சாவடியிலும், இடைப்பட்ட பகுதியில் 3 இடங்களிலும் கோட்டைப்பட்டினம் காவல் துணைக் கண்காணிப்பாளா் வெங்கடேசன் தலைமையில் 240-க்கும் மேற்பட்ட போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். இச்சோதனை வெள்ளிக்கிழமையும் நடைபெறவுள்ளது.

X
Dinamani
www.dinamani.com