விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

புதுகைக்கு சிவப்பு எச்சரிக்கை 433 நிவாரண முகாம்கள் தயாா்

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு அதி கன மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மாவட்டம் முழுவதும் மொத்தம் 433 பேரிடா் நிவாரண முகாம்களைத் தயாா் நிலையில் வைத்திருக்க மாவட்ட ஆட்சியா் மு .அருணா உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :27 நவம்பர் 2025, 6:49 pm

Syndication

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு அதி கன மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மாவட்டம் முழுவதும் மொத்தம் 433 பேரிடா் நிவாரண முகாம்களைத் தயாா் நிலையில் வைத்திருக்க மாவட்ட ஆட்சியா் மு .அருணா உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு அதிகன மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையால் ஏற்படும் பாதிப்புகளை எதிா்கொள்ள மாவட்ட வருவாய் அலுவலா் நிலையிலான 4 போ் மேற்பாா்வை அலுவலா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். 12 வட்டங்களுக்கும் துணை ஆட்சியா்கள் நிலையில் பொறுப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளின் பணியாளா்கள் அனைவரும் தயாா் நிலையில் இருக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் 433 பேரிடா் நிவாரண முகாம்கள் தயாா் நிலையில் வைக்க வேண்டும்.

கடலோரப் பகுதிகளிலுள்ள 9 பல்நோக்குக் கட்டடங்களையும் தயாா் நிலையில் வைக்க வேண்டும். 77 இடங்களில் மழைநீா் தேங்கும் பகுதிகளிலுள்ள மக்களை பாதுகாப்பாக மாற்று இடங்களில் தங்க வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள் மழை பாதிப்புகளை அறிய டிஎன்-அலா்ட் என்ற செயலியை கைப்பேசியில் பதிவிறக்கி வைத்துக் கொள்ள வேண்டும். 1077, 04322 222207 ஆகிய எண்களில் பாதிப்புகளைத் தெரிவிக்கலாம். 70923 00029 என்ற கட்செவி அஞ்சல் (வாட்ஸ்ஆப்) எண்ணிலும் தகவல்களைத் தெரிவிக்கலாம்.