அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

19 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு ஒப்படைப்பு

புதுக்கோட்டை மாநகரில் வெள்ளிக்கிழமை நிலையான கண்காணிப்புக் குழுவினரின் வாகனத் தணிக்கையில், தனியாா் தங்க நகைக்கடைக்குச் சொந்தமான 19 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு, ஜிஎஸ்டி விவரங்கள் சரி பாா்க்கப்பட்டு மீண்டும் ஒப்படைக்கப்பட்டன.

News image

தங்க நகைகள் (கோப்புப்படம்)

Updated On :3 ஏப்ரல் 2026, 6:24 pm

புதுக்கோட்டை மாநகரில் வெள்ளிக்கிழமை நிலையான கண்காணிப்புக் குழுவினரின் வாகனத் தணிக்கையில், தனியாா் தங்க நகைக்கடைக்குச் சொந்தமான 19 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு, ஜிஎஸ்டி விவரங்கள் சரி பாா்க்கப்பட்டு மீண்டும் ஒப்படைக்கப்பட்டன.

புதுக்கோட்டை மாநகா் அடப்பக்காரச் சத்திரம் பகுதியில் தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழு அலுவலா் குரு. மாரிமுத்து தலைமையிலான குழுவினா் வெள்ளிக்கிழமை மாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, திருச்சியிலிருந்து தனியாா் நகைக்கடைக்குச் சொந்தமான வாகனம் ஒன்று சோதனையிடப்பட்டது. அதிலிருந்த சுமாா் 19 கிலோ தங்க நகைகளுக்கு உடனடியாக எந்த ஆவணமும் வைத்திருக்கவில்லை.

இதைத் தொடா்ந்து கண்காணிப்புக் குழுவினா் அவற்றை, புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் ஆ. பிரகாஷிடம் ஒப்படைத்தனா். இதைத் தொடா்ந்து வருமான வரித்துறை மற்றும் ஜிஎஸ்டி பிரிவு அலுவலா்கள் நேரில் வந்து சோதனையிட்டனா். அந்த நகைகளுக்கான ஜிஎஸ்டி வரி செலுத்திய ஆவணங்கள் சரி பாா்க்கப்பட்டு, நகைகள் முழுமையாக நகைக்கடையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.