ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதனின் சொத்து மதிப்பு ரூ. 39 லட்சம்

ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதனின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 39 லட்சம்.

News image
Updated On :7 ஏப்ரல் 2026, 6:43 pm

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதனின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 39 லட்சம்.

ஆலங்குடி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் திங்கள்கிழமை அவா் தாக்கல் செய்த வேட்புமனுவுடன் அளிக்கப்பட்டுள்ள விவரங்கள்:

கையிருப்பு ரொக்கம் ரூ. 50 ஆயிரம். வங்கியிருப்பு, தங்கம் உள்ளிட்ட அசையும் சொத்துகள் மதிப்பு ரூ. 24,19,380, மனைவி மெ. சுமதியிடம் ரூ. 89,40,549.

நிலம், கட்டடங்கள் உள்ளிட்ட அசையாச் சொத்துகளின் மதிப்பு ரூ. 15 லட்சம். மனைவி சுமதி பெயரில் ரூ. 1,95,00,000. அமைச்சா் பெயரில் கடன் இல்லை. மனைவி பெயரில் கடன் ரூ. 81,06,237.

வருமான வரித் துறையில் 2025-26-ஆம் நிதியாண்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வருமானக் கணக்குப்படி ஆண்டு வருவாய் ரூ. 10,42,710, மனைவி மெ. சுமதியின் ஆண்டு வருவாய் ரூ. 13,83,930.

வழக்குகள் எதுவும் இல்லை, தண்டனை எதுவும் பெறப்படவில்லை.