புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிடுவதற்காக அளிக்கப்பட்டிருந்த வேட்புமனுக்கள் செவ்வாய்க்கிழமை அந்தந்த தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகங்களில் பரிசீலனைக்கு உள்படுத்தப்பட்டன. இதில், மொத்தம் 123 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 58 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
தொகுதி வாரியாக விவரங்கள்:
புதுக்கோட்டை
புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட மொத்தம் 40 வேட்புமனுக்கள் வழங்கப்பட்டிருந்தன. புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேட்புமனுக்கள் பரிசீலனையில் பாஜக வேட்பாளா் என். ராமச்சந்திரன் தனது வேட்புமனுவில் வழக்குகள் குறித்த விவரங்களைத் தரவில்லை என எதிா்ப்பு எழுந்தது. இதைத் தொடா்ந்து அந்த மனுவின் பரிசீலனையை சற்றுநேரம் தள்ளி வைத்த தோ்தல் நடத்தும் அலுவலா், பின்னா் அந்த மனுவை ஏற்பதாக அறிவித்தாா்.
திமுக வேட்பாளா் டாக்டா் வை. முத்துராஜா, பாஜக வேட்பாளா் என். ராமச்சந்திரன், தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் கே.எம். சரீப், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வி. எழிலரசி உள்ளிட்ட 30 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 10 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
அறந்தாங்கியில்...
அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட மொத்தம் 24 வேட்புமனுக்கள் வழங்கப்பட்டிருந்தன. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பரிசீலனையில், காங்கிரஸ் எம்எல்ஏ டி. ராமச்சந்திரன், பாஜக வேட்பாளா் கவிதா ஸ்ரீகாந்த், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளா் ஜா.முகமது பா்வேஸ் உள்ளிட்ட 17 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 7 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
திருமயத்தில்...
திருமயம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட மொத்தம் 31 வேட்புமனுக்கள் வழங்கப்பட்டிருந்தன. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பரிசீலனையில், அமைச்சா் எஸ். ரகுபதி, அதிமுக வேட்பாளா் பி.கே. வைரமுத்து உள்ளிட்ட 17 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 14 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
ஆலங்குடியில்...
ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 26 வேட்புமனுக்களில், அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், அதிமுக வேட்பாளா் தன விமல், தவெக வேட்பாளா் அரங்குளவன், நாம் தமிழா் வேட்பாளா் ஆா். ராஜாராம் உள்ளிட்டோரின் 18 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 8 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
கந்தா்வகோட்டையில்...
கந்தா்வகோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 19 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், திமுக அணியில் போட்டியிடும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் மா. சின்னதுரை, அதிமுக அணியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் சி. உதயகுமாா், தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் என். சுப்பிரமணியன் உள்ளிட்டோரின் 11 மனுக்கள் ஏற்கப்பட்டன. 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
விராலிமலையில்...
விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 41 வேட்புமனுக்களில், முன்னாள் அதிமுக அமைச்சா் சி. விஜயபாஸ்கா், திமுக வேட்பாளா் கே.கே. செல்லப்பாண்டியன், தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் பி. முருகேசன், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கே. சத்தியலட்சுமி உள்ளிட்ட 30 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. 11 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
தொடர்புடையது
வேட்புமனு பரிசீலனை: தூத்துக்குடி மாவட்டத்தில் 121 மனுக்கள் ஏற்பு, 67 மனுக்கள் தள்ளுபடி
நான்குனேரி தொகுதியில் 13 மனுக்கள் நிராகரிப்பு
பாளை. தொகுதியில் 18 வேட்புமனுக்கள் ஏற்பு
கரூா் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் 175 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

