தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 குறைவு! பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை ‘போக்ஸோ’ வழக்கில் பெட்டிக்கடைக்காரா் கைது

கைது - சித்திரிப்பு

Published On :

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெட்டிக்கடைக்காரரை ‘போக்ஸோ’ வழக்கில் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் வட்டம், பூலாங்குடி காலனியைச் சோ்ந்தவா் அ. சண்முகசுந்தரம் (50). இவா் கல்லாலங்குடி பேருந்து நிறுத்தம் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை பள்ளிப்பேருந்தில் இருந்து இறங்கி இவரது பெட்டிக்கடை அருகே தந்தையின் வருகைக்காக காத்திருந்த சிறுமிக்கு சண்முகசுந்தரம் பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் ஆலங்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சண்முகசுந்தரத்தை போக்ஸோ வழக்கில் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.