தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

புதுக்கோட்டையில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாத தவெக அரசைக் கண்டித்து புதுக்கோட்டையில் அதிமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்

Published On :

விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாத தவெக அரசைக் கண்டித்து புதுக்கோட்டையில் அதிமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலா்கள் பழனிவேல் (வடக்கு), கலைச்செல்வன் (கிழக்கு), ராமு (தெற்கு) ஆகியோா் தலைமை வகித்தனா். அதிமுக செய்தித் தொடா்பு பிரிவைச் சோ்ந்த கல்யாணசுந்தரம் கலந்து கொண்டு பேசினாா்.

தோ்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி நதிநீா்ப் பங்கீடு விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை விட்டுத்தராமல், உரிய பங்கைப் பெற்றுத் தர வேண்டும்.

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கவனமாக இருந்து தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.