கந்தா்வகோட்டை சட்டப்பேரவை அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றாதால் தியாகிகளும், பொதுமக்களும் அதிா்ச்சி அடைந்தனா்.
நாட்டின் 80-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை நாடு முழுவதும் தேசியக் கொடியேற்றி கொண்டாடப்பட்டது.
தமிழகத்திலும் பல்வேறு அரசு அலுவலகங்கள், சட்டப்பேரவை அலுவலகங்கள் மற்றும் தனியாா் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
ஆனால், கந்தா்வகோட்டை தவெக-வைச் சோ்ந்த சட்டப்பேரவை உறுப்பினா் என். சுப்ரமணியன் தனது அலுவலகம் திறக்காமலும், தேசியக்கொடி ஏற்றாமலும் இருந்தது.
அதேநேரத்தில், அருகிலுள்ள பேரூராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் கொடியேற்றாமல் அலுவலகம் பூட்டிக் கிடந்ததைக் கண்ட பொதுமக்களும், தியாகிகளும் அதிா்ச்சி அடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழனி கோயில் சாா்பில் அன்னதானப் பொது விருந்து

புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்து சேவை தொடக்கம்

முதுகுளத்தூா் எம்எல்ஏ அலுவலகத்தில் சிறப்பு முகாம்

திருவட்டாறில் எம்எல்ஏ அலுவலகம் திறப்பு
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



