கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

புதுக்கோட்டை மாவட்ட மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை

News image

கோப்புப் படம்

Updated On :18 வினாடிகள் முன்பு

கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், புதுக்கோட்டை மாவட்ட மீனவா்கள் (ஆக. 17) திங்கள்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக் கூடாது என மீன்வளத் துறை அறிவித்துள்ளது.

வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்தச் சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்றும், கடலில் மணிக்கு சுமாா் 40 முதல் 50 கிலோமீட்டா் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில், திங்கள்கிழமை (ஆக.17)முதல் மறு அறிவிப்பு வரும் வரை புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவா்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கக் கூடாது என மீன்வளத் துறை அறிவித்துள்ளது.

மேலும், படகுகளைப் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்குமாறும் மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.