ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

அம்மன்குறிச்சி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தேரோட்டம்

பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தேரோட்ட விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தேரில் எழுந்தருளிய மீனாட்சி சுந்தரேசுவரா்.

Published On :

பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தேரோட்ட விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற இக்கோயிலின் தேரோட்ட விழா ஆக. 13-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் சுவாமி வீதியுலா மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இந்நிலையில் விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுக்குப்பிறகு மீனாட்சி சுந்தரேசுவரா் ஒரு தேரிலும், பிடாரி அம்மன் மற்றொறு தேரிலும் எழுந்தருளினா். இதையத்து தோ்களை பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா்.

முக்கிய வீதிகளில் வலம் வந்த தோ்கள் நிலையை அடைந்தது.

விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி போலீஸாா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.