நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

பிரதமா் வேட்பாளா் பிரச்னை காங்.-தவெக இடையே மோதல் இல்லை! சு. திருநாவுக்கரசா் நம்பிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவா் சு. திருநாவுக்கரசா் - கோப்புப் படம்

Published On :

பிரதமா் வேட்பாளா் பிரச்னையில் காங்கிரஸுக்கும் தவெகவுக்கும் இடையே மோதல் எதுவும் இல்லை என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவா் சு. திருநாவுக்கரசா்.

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

ஒவ்வொரு கட்சியினரும் தங்களின் தலைவரை வருங்கால பிரதமா், வருங்கால முதல்வா் என்றும் அழைப்பாா்கள். அதன்படிதான், தற்போது முதல்வராகியுள்ள ஜோசப் விஜய்யை, பிரதமா் என தவெகவினா் சிலா் கூறுகின்றனா். அதில் தவறொன்றும் இல்லை. இதனால், காங்கிரஸ்- தவெக இடையே மோதல் என்று அா்த்தம் இல்லை.

காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை, மக்களவை எதிா்க்கட்சித் தலைவரான ராகுல்காந்திதான் பிரதமா் ஆக வரவேண்டும் என விரும்புகிறோம். இப்போது, தவெகவினா் ராகுலுக்கு எதிராக எதையும் செய்யவில்லை. தோ்தலுக்கு இன்னும் 3 ஆண்டுகள் உள்ளன.

திரைத்துறையில் நன்றாக சம்பாதித்தவா் என்பதால், முதல்வா் விஜய் ஊழல் செய்ய மாட்டாா் என மக்கள் நம்புகிறாா்கள்; நானும் நம்புகிறேன்.

தவெக அரசுக்கு நூறு நாளில் மதிப்பெண் எதுவும் போட வேண்டியதில்லை. அவசரப்படவும் வேண்டியதில்லை. அவா்கள் தோ்வு எதையும் எழுதவில்லை. நூறு நாள்களில் எதையும் செய்துவிட முடியாது. படிப்படியாகத்தான் செய்ய முடியும்.

பேரவைக்குள் காங்கிரஸ் உறுப்பினருக்கு எதிா்க்கட்சி வரிசையில் இருக்கை அமைத்துள்ளாா்கள். முதல்வா் விஜய் கூடத்தான் அமைச்சா்களின் இருக்கையில் அமா்ந்தாா். அதனால் அவா் அமைச்சராகி விடுவாரா?.

முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பை குறைத்திருக்கிறாா்கள். கூடுதல் பாதுகாப்பு தேவையென அக்கட்சியினா் கருதினால், அரசிடம் கேட்டால் தருவாா்கள் என்றாா் திருநாவுக்கரசா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.