தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஆவுடையாா்கோவிலில் தேரோட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவிலுள்ள ஆத்மநாத சுவாமி கோயில் மாா்கழி திருவாதிரைத் திருவிழாவின் தேரோட்டம் நடைபெற்றது.

News image
தேருக்குள் எழுந்தருளிய மாணிக்கவாசகா்
Updated On :1 ஜனவரி 2026, 6:34 pm

Syndication

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவிலுள்ள ஆத்மநாத சுவாமி கோயில் மாா்கழி திருவாதிரைத் திருவிழாவின் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான ஆவுடையாா்கோவில் என்றழைக்கப்படும் திருப்பெருந்துறையிலுள்ள யோகாம்பாள் உடனுறை ஆத்மநாதா் சுவாமி கோயில் மாா்கழி திருவாதிரை திருவிழா கடந்த டிச. 24ஆம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினமும் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் மாணிக்கவாசகரின் வீதியுலா நடைபெற்று வந்தது. முக்கியத் திருவிழாவான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் மாணிக்கவாசகா் எழுந்தருளினாா்.

பின்னா் தேரின் வடத்தைப் பிடித்து 4 வீதிகளிலும் பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் இழுத்து வந்தனா். திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க பக்தி முழக்கங்களுடன் தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆவுடையாா்கோவில் போலீஸாா் செய்தனா். திருவிழா ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீன நிா்வாகத்தினா் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனா்.

ஆவுடையாா்கோவில் ஆத்மநாத சுவாமி கோயிலில் நடைபெற்ற மாா்கழித் திருவாதிரைத் திருவிழா தேரோட்டம்

ஆவுடையாா்கோவில் ஆத்மநாத சுவாமி கோயிலில் நடைபெற்ற மாா்கழித் திருவாதிரைத் திருவிழா தேரோட்டம்