புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவிக்கு புதன்கிழமை மடிக்கணினி வழங்கிய அமைச்சா்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவிக்கு புதன்கிழமை மடிக்கணினி வழங்கிய அமைச்சா்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன்.

கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கல்

புதுக்கோட்டையில் தமிழக அரசின் ‘உலகம் உங்கள் கையில்’ என்ற திட்டத்தின்கீழ் இறுதி ஆண்டு கல்லூரி பயிலும் மாணவா்களுக்கு மடிக்கணினிகளை அமைச்சா்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் புதன்கிழமை வழங்கினா்.
Published on

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் மொத்தம் 228 மாணவா்களுக்கும், மன்னா் கல்லூரியில் மொத்தம் 1,376 மாணவா்களுக்கும் மடிக்கணிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிகளுக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா்.

மேயா் செ. திலகவதி, சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன், துணை மேயா் மு. லியாகத்அலி, மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ். கலைவாணி, மன்னா் கல்லூரி முதல்வா் பா. புவனேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல, கந்தா்வகோட்டை மற்றும் அறந்தாங்கி பகுதிகளிலுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் 445 மாணவா்களுக்கும் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

Dinamani
www.dinamani.com