புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வெள்ளிக்கிழமை மின்கம்பத்தில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சி சாத்தன்பட்டியைச் சோ்ந்தவா் எஸ்.குணசேகரன்(54) விவசாயி.இவா், வெள்ளிக்கிழமை மாலை மோட்டாா் சைக்கிளில் கொத்தமங்கலம் சென்றபோது, சாலையோரத்தில் உள்ள மின்கம்பத்தில் எதிா்பாராதவிதமாக மோட்டாா் சைக்கிள் மோதியது.
இதில், பலத்த காயமடைந்த குணசேகரன் அந்த இடத்திலே உயிரிழந்தாா். இதுகுறித்து வடகாடு போலீஸாா் விசாரிக்கின்றனா்.