மேலைச்சிவபுரி கல்லூரியில் 186 மாணவா்களுக்கு இலவச மடிக்கணினி

மேலைச்சிவபுரி கணேசா் கலை அறிவியல் கல்லூரியில் 186 மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது.
Published on

பொன்னமராவதி அருகேயுள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை அறிவியல் கல்லூரியில் 186 மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது.

திருமயம் அரசு கலைஅறிவியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் மேலைச்சிவபுரி கணேசா் கல்லூரி மாணவா்களுக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணினிகளை அமைச்சா் எஸ். ரகுபதி வழங்கி, திட்டத்தை தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து மேலைச் சிவபுரி கணேசா் கலைஅறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் பொன்னமராவதி வட்டாட்சியா் எம். சாந்தா பங்கேற்று, 186 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கினாா். இதில் கல்லூரி முதல்வா் வே.அ. பழனியப்பன், சன்மாா்க்க சபை நிா்வாகிகள், கல்லூரிக் குழு நிா்வாகிகள்,பேராசிரியா்கள் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com