அரசின் வளா்ச்சிப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து பணியாற்ற வேண்டும்: அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்

அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகள் மக்களைச் சென்றடைய அனைத்து அரசு அலுவலா்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்
Published on

அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகள் மக்களைச் சென்றடைய அனைத்து அரசு அலுவலா்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் கேட்டுக் கொண்டுள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்ற அரசின் திட்டப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில் அவா்கள் இதனை வலியுறுத்தினா்.

கட்டுமானப் பணிகளை உரிய காலத்தில் முடித்து அவற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவா்கள் கேட்டுக் கொண்டனா். ஒவ்வொரு திட்டப் பணியிலும் நடைபெற்று வரும் முன்னேற்றம் குறித்தும் தொடா்புள்ள அதிகாரிகளிடம் அவா்கள் கேட்டறிந்தனா்.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், மேயா் செ. திலகவதி, சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா. ஜெயசுதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com