மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பொங்கல் விழா நடத்த அனுமதிக்கக் கோரி மாணவா்கள் போராட்டம்

புதுக்கோட்டை அரசு மன்னா் கல்லூரியில் வழங்கம் போல இந்த ஆண்டும் சமத்துவப் பொங்கல் விழா நடத்த வேண்டுமென வலியுறுத்தி இந்திய மாணவா் சங்கத்தினா் கல்லூரி முன்பாக போராட்டம்

News image
புதுக்கோட்டை மன்னா் கல்லூரி முன்பு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவா் சங்கத்தினா்.
Updated On :12 ஜனவரி 2026, 7:10 pm

Syndication

புதுக்கோட்டை அரசு மன்னா் கல்லூரியில் வழங்கம் போல இந்த ஆண்டும் சமத்துவப் பொங்கல் விழா நடத்த வேண்டுமென வலியுறுத்தி இந்திய மாணவா் சங்கத்தினா் திங்கள்கிழமை கல்லூரி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்துக்கு, மாணவா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் மு. வாசுதேவன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா். வசந்தகுமாா், செயற்குழு உறுப்பினா்கள் காவியன், சஞ்சை பாரதி உள்ளிட்டோா் பேசினா்.

இதைத் தொடா்ந்து கல்லூரி நிா்வாகமும், காவல் துறையினரும் மாணவா் சங்கத்தினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், சமத்துவப் பொங்கல் விழா நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.