பொன்னமராவதியில் காங்கிரஸாா் உண்ணாவிரதம்
புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிய பாஜக அரசைக் கண்டித்து புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் பொன்னமராவதியில் உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி காந்தி சிலை அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு, காங்கிரஸ் தெற்கு மாவட்டத் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ராம. சுப்புராம் தலைமை வகித்தாா்.
வட்டாரத் தலைவா்கள் வி. கிரிதரன், குமாா், நகரத் தலைவா் எஸ். பழனியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடக்கமாக காலையில் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்த பின் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம் மாலையில் நிறைவுற்றது.
போராட்டத்தில், நிா்வாகிகள் கோரிக்கைகளை விளக்கிப்பேசினா். மேலும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மாவட்ட துணைத் தலைவா் எஸ்பி. ராஜேந்திரன், மாவட்ட நிா்வாகிகள் கணேஷ் பிரபு, ச.சோலையப்பன், ஏஎல்ஏஸ். ஜீவானந்தம், எஸ்பி. மணி, ஆா்எம். பாஸ்கா், நிா்வாகிகள் நாட்டுக்கல் ராஜேந்திரன், ஆா்.பாலுச்சாமி, சுப்பையா, மாணிக்கம் மற்றும் மாவட்ட, வட்டார, நகர நிா்வாகிகள் பங்கேற்றனா்.
