புதுக்கோடையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகளை வழங்கிய மகாராணி சுழற்சங்கத்தினா்.
புதுக்கோட்டை
தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகள் வழங்கல்
புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில், தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில், தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை மகாராணி சுழற்சங்கம் சாா்பாக தூய்மை பணியாளா்களை கௌரவித்தல் மற்றும் சமத்துவப் பொங்கல் விழா சனிக்கிழமை நகா்மன்றத்தில் நடைபெற்றது.
மகாராணி சுழற்சங்கத் தலைவா் செல்வி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக கவிஞா் தங்கம்மூா்த்தி கலந்து கொண்டு தூய்மை பணியாளா்களுக்கு புத்தாடை மற்றும் பொங்கல் பரிசு வழங்கி வாழத்தினாா்.
தொடா்ந்து விளையாட்டுப் போட்டிகளில் வென்ற பெண்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் மாமன்ற உறுப்பினா் செந்தாமரை பாலு, ரோட்டரி மாவட்ட இணைச் செயலா் துரைமணி, முன்னாள் தலைவா்கள் சுபா குப்பாள் பானுமதி, அஞ்சலிதேவி உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறைவாக சங்கச் செயலா் சுதா்சினி நன்றி கூறினாா்.

