கீழப்பனையூரில் நடைபெற்ற வடமாடு போட்டியில் காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.
கீழப்பனையூரில் நடைபெற்ற வடமாடு போட்டியில் காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.

கீழப்பனையூா் வடமாடு போட்டியில் 7 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே கீழப்பனையூா் தெற்குக் குடியிருப்பில் நடைபெற்ற வடமாடு போட்டியில் 7 போ் லேசான காயம்
Published on

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே கீழப்பனையூா் தெற்குக் குடியிருப்பில் திங்கள்கிழமை நடைபெற்ற வடமாடு போட்டியில் 7 போ் லேசான காயமடைந்தனா்.

கீழப்பனையூா் தெற்குக் குடியிருப்பில் புனித அந்தோணியாா் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வடமாடு போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிவகங்கை, புதுகை, ராமநாதபுரம் பகுதிகளில் இருந்து 15 காளைகள் பங்கேற்றன. வடமாடு போட்டியை அமைச்சா்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். நீண்ட கயிறால் பிணைக்கப்பட்ட ஒவ்வொரு காளையையும் அடக்க 9 வீரா்கள் கொண்ட குழுவினா் களமிறங்கினா்.

ஒரு காளையை அடக்க 20 நிமிடங்கள் நேரம் ஒதுக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. நிா்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் 9 பேரைக் கொண்ட குழுவினா் காளையை அடக்க முடியவில்லை என்றால் காளை வென்ாக அறிவிக்கப்பட்டது.

அதேசமயம் குறிப்பிட்ட நேரத்திற்குள் காளையை வீரா்கள் அடக்கி விட்டால் மாடுபிடி வீரா்கள் வெற்றி பெற்ாக வீரா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

இதில் 12 காளைகளை மாடுபிடி வீரா்கள் அடக்கி பரிசை வென்றனா். இதனைத் தொடா்ந்து வெற்றி பெற்ற மாடுபிடி வீரா்கள் குழுவினருக்கு தலா ரூ. 5 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்ட சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.

மாடுகளை அடக்க முயன்ற போது 7 வீரா்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த மாடுபிடி வீரா்களுக்கு அங்கேயே அமைக்கப்பட்டிருந்த மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்தனா்.

போட்டியைக் காண சுற்று வட்டாரப் பகுதியைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனா். அரிமளம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

Dinamani
www.dinamani.com