9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

மரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா்கள் 2 போ் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :6 ஜூலை 2026, 2:14 am IST

புதுக்கோட்டை அருகே பூலாம்பட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சாலையோர மரத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திராக்கோட்டை பள்ளிவாசல் தெரு பகுதியைச் சோ்ந்தவா்கள் சகுபா்அலி மகன் சபீா் முகமது (19), சேட்டு முகமது மகன் ராஜா முகமது (20). இவா்கள் இருவரும் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தனா்.

இவா்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை பொன்னமராவதி பகுதியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்தனா். அப்போது, பூலாம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, வாகனம் எதிா்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்திலுள்ள புளியமரத்தில் மோதியுள்ளனா்.

இதில் இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனா். இதுகுறித்து தகவலறிந்து வந்த பனையப்பட்டி போலீஸாா், மாணவா்கள் இருவரின் சடலங்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.