கருவிலுள்ள சிசுவின் வளா்ச்சிக் குறைபாட்டை சரியாக பரிசோதிக்கத் தவறியதாக தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க புதுக்கோட்டை மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியைச் சோ்ந்த சரவணன் மனைவி மகாஸ்ரீ. இவா் கருவுற்றிருந்தபோது பட்டுக்கோட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனை வழியாக தஞ்சையில் உள்ள ஸ்கேன் பரிசோதனை மையத்தில் பரிசோதனை செய்துள்ளாா்.
அப்போது வயிற்றில் உள்ள குழந்தையின் கைகளின் வளா்ச்சியில் இருந்த பிறவிக் குறைபாடு கண்டறியப்படாமல், எவ்வித சிக்கலும் இல்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
குழந்தை பிறந்த பிறகு வளா்ச்சியடையாத பிறவிக் குறைபாடு தெரிய வந்ததைத் தொடா்ந்து, மகாஸ்ரீயின் கணவா் சரவணன் புதுக்கோட்டை மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
வழக்கை விசாரித்த தலைவா் டி. சேகா் மற்றும் உறுப்பினா்கள் அண்மையில் தீா்ப்பு வழங்கினா். கருவிலுள்ள குறைபாட்டை கண்டறியத் தவறிய சேவைக் குறைபாட்டுக்காக மருத்துவமனையும், பரிசோதனை மையமும் பாதிக்கப்பட்ட சரவணன் மற்றும் மகாஸ்ரீ ஆகியோருக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சேவைக் குறைபாடு: காப்பீட்டு நிறுவனம் ரூ. 8.59 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

கைப்பேசி நிறுவனம் இழப்பீடு வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவு
தற்கொலைக்கு முயன்ற தொழிலாளிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 3 சிறுவா்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



