புதுக்கோட்டையில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் தமிழ்நாடு நாள் விழாவையொட்டி கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் தமிழ்நாடு நாள் விழா (ஜூலை 18) கொண்டாடப்படுவதையொட்டி பள்ளி மாணவா்களுக்கான போட்டிகள் புதுக்கோட்டை மன்னா் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
மாவட்ட அளவில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்துப் பள்ளி மாணவா்களுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டு, நடைபெற்ற இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றோா் விவரம்:
கட்டுரைப் போட்டி: கறம்பக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி அ. சுபகாா்த்திகா, மௌண்ட் சீயோன் மெட்ரிக் மாணவி சி.ச. சாம்பவி, விராலிமலை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி த. சாதனா ஆகியோா் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனா்.
பேச்சுப்போட்டி: சந்தைப்பேட்டை அரசு மகளிா் பள்ளி மாணவி பா. மாரீஸ்வரி, பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி மாணவி மு. சௌமியா, குளத்தூா் முத்துஸ்வாமி வித்யாலயா மாணவி பூ. விஷ்ணுபிரியா.
இவ்விரு போட்டிகளிலும் முதல் பரிசு ரூ. 10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ. 7 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ. 5 ஆயிரத்துக்கான காசோலைகள் (மொத்தம் ரூ. 44 ஆயிரம்) மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வழங்கிப் பாராட்டினாா்.
அப்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவீந்திரகுமாா் குப்தா, தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் ச. சீதாலட்சுமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் சாலை செந்தில் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி: அருணாச்சலா பள்ளி மாணவி முதல் பரிசு

கோரிக்கை விடுத்த பெண்ணுக்கு வீடு ஒதுக்கீடு: அமைச்சா் ராஜ்குமாா் வழங்கினாா்
சிறந்த தமிழ் நூல்களுக்கு பரிசு: தமிழ் வளா்ச்சித் துறை தகவல்







