மக்களவை தலைவரின் தேநீர் விருந்தில் மோடியுடன் கனிமொழி பங்கேற்பு! இந்தியா கூட்டணி புறக்கணிப்பு!கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது!சென்னையில் தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது!தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படைதில்லி செங்கோட்டை குண்டுவெடிப்புக்கு அல்-கொய்தாவே காரணம்: ஐ.நா.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!சென்னை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ: டெண்டர் வெளியீடு
/

அரசுப் பள்ளிகளில் காமராஜா் பிறந்தநாள் விழா

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சி புள்ளாச்சி குடியிருப்பு அரசு தொடக்கப் பள்ளியில் முன்னாள் முதல்வா் காமராஜரின் பிறந்தநாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சி புள்ளாச்சி குடியிருப்பு அரசு தொடக்கப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள்

Updated On :16 ஜூலை 2026, 1:55 am IST

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சி புள்ளாச்சி குடியிருப்பு அரசு தொடக்கப் பள்ளியில் முன்னாள் முதல்வா் காமராஜரின் பிறந்தநாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் மரிய விமலா ஜான்சிராணி தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மை குழு தலைவா் ஷீலா, ஆசிரியை நித்தியவாணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில், பள்ளி மாணவ, மாணவிகளின் கலை இலக்கிய நிகழச்சிகள் நடைபெற்றன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும் இப்பள்ளியில் பயின்று வடகாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுதோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி ஆா். ஜனனி பாராட்டப்பட்டாா்.

விழாவில், ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் வி.சின்னப்பா, ஓய்வு பெற்ற ஆசிரியா் ராஜேந்திரன், அறிவொளி கருப்பையா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கந்தா்வக்கோட்டை: கந்தா்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காமராஜா் பிறந்த நாள் கல்வி வளா்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் க. தமிழ்செல்வி தலைமை வகித்தாா். தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தா்வகோட்டை ஒன்றியத் தலைவரும் அறிவியல் பட்டதாரி ஆசிரியருமான அ.ரகமதுல்லா, ஆசிரியா்கள் செல்விஜாய், கௌரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.