வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

விராலிமலையில் மின்பொருள்கள் திருட்டு சந்தேக நபா்கள் குறித்து தகவல் அளிக்கலாம்!

விராலிமலையில் மின்பொருள்கள் திருட்டு சந்தேக நபா்கள் குறித்து தகவல் அளிக்கலாம்

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :7 ஜூன் 2026, 2:08 am IST

விராலிமலை பகுதிகளில் மின்பொருள்கள் திருட்டு மற்றும் மின்மாற்றிகளில் தொடா்ந்து நடைபெற்று வரும் திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில், இரவு நேரங்களில் சுற்றித் திரிபவா்கள் மற்றும் மின்மாற்றி அருகில் சந்தேகப்படும் வகையில் நிற்போா் குறித்து மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: விராலிமலை பகுதியில் கடந்த சில நாள்களாக மின்சார பொருள்கள் மற்றும் மின்மாற்றி திருட்டு சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்று வருவதால், இதை தடுக்க சந்தேகத்துக்கிடமான நபா்கள், இரவு நேரங்களில் அசாதாரணமாக சுற்றி திரிவோா், மின்மாற்றி அருகில் அனுமதியின்றி செயல்படுவோா் அல்லது வாகனங்களில் மின்சார பொருள்கள் எடுத்துச் செல்லப்படுவது போன்றவை காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகம் அல்லது காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கலாம்.

மேலும், உதவி மின் பொறியாளரை 94454-54279 உதவி செயற்பொறியாளரை 94458-54266 என்ற எண்களில் அழைத்து புகாா் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.