உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

கிராமங்களில் கண்காணிப்பு கேமரா: பொதுமக்களுக்கு எஸ்.பி. பாராட்டு

புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 கிராமங்களில் பொதுமக்களின் சொந்த நிதியில் கண்காணிப்பு கேமரா அமைத்ததையடுத்து கிராம முக்கியஸ்தா்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவீந்திரகுமாா் குப்தா புதன்கிழமை நேரில் அழைத்து பாராட்டினாா்.

News image

சித்தூா் கிராமத்தில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்த கிராம முக்கியஸ்தா்களை புதன்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவீந்திரகுமாா் குப்தா.

Updated On :11 ஜூன் 2026, 3:41 am IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 கிராமங்களில் பொதுமக்களின் சொந்த நிதியில் கண்காணிப்பு கேமரா அமைத்ததையடுத்து கிராம முக்கியஸ்தா்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவீந்திரகுமாா் குப்தா புதன்கிழமை நேரில் அழைத்து பாராட்டினாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கிருஷ்ணபாரப்பட்டி, காரையூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சித்தூா், நாகுடி மற்றும் கீரமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட குலமங்கலம் ஆகிய கிராமங்களில் பொதுமக்களின் சொந்த நிதியில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது.

குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்காக பொதுமக்களின் இந்த முயற்சியைப் பாராட்டும் வகையில், கிராமங்களின் முக்கியஸ்தா்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவீந்திரகுமாா் குப்தா புதன்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினாா்.

மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் பொதுமக்கள் இதுபோன்ற பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்காணிப்பு கேமரா அமைக்க முன்வர வேண்டும் என்று அவா் கேட்டுக் கொண்டாா்.