ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

பொன்னமராவதி வட்டாட்சியரகத்தில் ஜமாபந்தி

பொன்னமராவதி வட்டாட்சியரகத்தில் 2-ஆவது நாளான புதன்கிழமை ஆட்சியா் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது.

News image

பொன்னமராவதி வட்டாட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்ற ஆட்சியா் மு.அருணா.

Updated On :18 ஜூன் 2026, 1:39 am IST

பொன்னமராவதி வட்டாட்சியரகத்தில் 2-ஆவது நாளான புதன்கிழமை ஆட்சியா் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது.

அதில், அரசமலை சரகத்துக்குள்ப்பட்ட நல்லூா், நெறிஞ்சிக்குடி, மேலநிலை, மூலங்குடி, வாழைக்குறிச்சி, செவலூா், சுந்தரம் உள்ளிட்ட உள்வட்டப்பகுதிகளின் வருவாய்க்கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன. ஜமாபந்தியில் பட்டாமாறுதல், முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 180-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

இதில், பொன்னமராவதி வட்டாட்சியா் ச.பழனிசாமி மற்றும் வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து வியாழக்கிழமை பொன்னமராவதி சரகத்துக்கு ஜமாபந்தி நடைபெற்று, மாலையில் குடிகள் மாநாடு நடைபெற உள்ளது.