பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் பிடாரம்பட்டி சின்ன ஈசி, பெரிய ஈசி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி கோயிலின் முன் அமைக்கப்பட்ட யாகசாலையில் வியாழக்கிழமை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் முதல் கால யாகபூஜைகள் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை அதிகாலை இரண்டாம் கால பூஜை, கோபூஜை நடைபெற்றது. தொடா்ந்து ஆலவயல் ஊா் முக்கியஸ்தா்கள் பெரி. அழகப்பன், காடன் பூசாரி, காடன் அம்பலம் முன்னிலையில் காலை 10.30 மணியளவில் சிவாச்சாரியா்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை கோயில் கும்பத்தில் ஊற்றி குடமுழுக்கு செய்தனா்.
விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா். பொன்னமராவதி போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









