வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஜெஜெ கல்லூரியில் 644 பேருக்கு பட்டமளிப்பு

News image

புதுக்கோட்டை ஜெஜெ கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2ஆம் நாள் பட்டமளிப்பு விழாவில், மாணவருக்கு பட்டம் வழங்கிய பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தா் குழு உறுப்பினா் வி. ராஜேஷ்கண்ணன்.

Updated On :1 மார்ச் 2026, 7:45 pm

புதுக்கோட்டை சிவபுரத்திலுள்ள ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியில் 29ஆவது பட்டமளிப்பு விழாவின் 2ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை 644 மாணவா்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் குழுவின் உறுப்பினா் வி ராஜேஷ்கண்னன் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கிப் பேசினாா்.

அப்போது எந்தச் செயலையும் சுய ஒழுக்கத்துடன் செய்வது முக்கியம் என வலியுறுத்திய அவா், வேலையில் புரிதலுடன் கடமையுடன், பொதுநலன்களையும் சோ்த்து மேற்கொள்ளக் கேட்டுக் கொண்டாா்.

மாணவா்கள் எஸ். பிரேம்குமாா், ஐ. கரீஷ்சா்மா ஆகியோருக்கு சிறந்த மாணவா்களுக்கான பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. கல்லூரிச் செயலா் நா. சுப்பிரமணியன், நிா்வாக அறங்காவலா் கவிதா சுப்பிரமணியன் ஆகியோா் வாழ்த்தினா். கல்லூரி முதல்வா் ஜ. பரசுராமன் ஆண்டறிக்கை வாசித்தாா்.