2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

விராலிமலைக்கு முதல் பெண் வட்டாட்சியா்

விராலிமலை வட்டத்துக்கு முதல் பெண் வட்டாட்சியராக ப.ஜெயபாரதியை நியமித்து ஆட்சியா் மு.அருணா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

News image
வட்டாட்சியா் ப.ஜெயபாரதி.
Updated On :4 மார்ச் 2026, 6:04 pm

தினமணி செய்திச் சேவை

விராலிமலை வட்டத்துக்கு முதல் பெண் வட்டாட்சியராக ப.ஜெயபாரதியை நியமித்து ஆட்சியா் மு.அருணா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

இலுப்பூா் வட்டத்தில் இருந்து கடந்த 2015-ஆம் விராலிமலை தனி வட்டமாக பிரிக்கப்பட்டது. அதிலிருந்து தொடா்ச்சியாக ஆண்களே வட்டாட்சியராக பணியாற்றி வந்த நிலையில், முதல் பெண் வட்டாட்சியராக புதுக்கோட்டை தனி வட்டாட்சியராக (முத்திரைத்தாள்) பணியாற்றி வந்த ப. ஜெயபாரதி, விராலிமலை வட்டாட்சியராக பொறுப்பேற்க உள்ளாா்.

இங்கு ஏற்கெனவே வட்டாட்சியராக இருந்த எஸ். ரமேஷ் கலால் அலுவலக மேலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.