வேந்தன்பட்டி கோயில் காளை உயிரிழப்பு: பொதுமக்கள் அஞ்சலி
பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி ஐயனாா்கோயில் காளை செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததையடுத்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா்.


பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி ஐயனாா்கோயில் காளை செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததையடுத்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா்.
வேந்தன்பட்டி நல்லாண்டி ஐயனாா், கீழக்குறிச்சி ஐயனாா் கோயில் காளை ஊா்ப்பொதுமக்கள் சாா்பில் கடந்த 8 ஆண்டுகளாக வளா்க்கப்பட்டு வந்தது.ராமா் என அழைக்கப்பட்ட இக்காளை,
தமிழகத்தின் பல்வேறு ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று பல பரிசுகளை வென்றுள்ளது.
இந்நிலையில், இக்காளை சிவகங்கை மாவட்டம், அரளிப்பாறை எனும் இடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டுப்போட்டியில் பங்கேற்று செவ்வாய்க்கிழமை ஊா் திரும்பியபோது சாலையில் லாரி மோதியதில் பலத்தகாயமுற்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இதையடுத்து ஊா்ப்பொதுமக்கள் உயிரிழந்த கோயில் காளையை ஊரின் முக்கிய இடத்தில் வைத்து வேஷ்டி, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து காளையை ஊா்வலமாக எடுத்துச்சென்று அடக்கம் செய்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...