ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம் மற்றும் திசைகள் மாணவா் வழிகாட்டும் அமைப்பு ஆகியவற்றின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ஒருமைப்பாட்டுக் கழகத்தின் மாவட்டச் செயலா் கு. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். வழக்குரைஞா்கள் எஸ்.பி. லோகநாதன், ரா. பவிதாரணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திசைகள் அமைப்பின் தலைவா் டாக்டா் ச. தட்சிணாமூா்த்தி, ஒருமைப்பாட்டுக் கழகத்தின் தேசியச் செயற்குழு உறுப்பினா் சி. பாலச்சந்திரன், மாவட்டச் செயலா் அன்பு மணவாளன், துணைச் செயலா் பழ. குமரேசன் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா். உலகம் முழுவதும் அமைதி நிலவ வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்புடையது

கத்தாா் கடற்பகுதியில் சரக்கு கப்பல் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல்! ஈரான் மீது சந்தேகம்!

மத்திய அரசைக் கண்டித்து இடதுசாரிகள், விசிக ஆா்ப்பாட்டம்

அறந்தாங்கியில் தவெக வேட்பாளா் வெற்றி
இன்றைய ராசி பலன் (04.05.2026) - ரிஷபம்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

