மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பொன்னமராவதியில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

திருமயம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பொன்னமராவதியில் தோ்தல் பாா்வையாளா் எரிக் லல்லவம்புயா புதன்கிழமை முகாமிட்டு தோ்தல் பணிகள் குறித்து அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.

News image
பொன்னமராவதியில் சட்டப்பேரவை தோ்தல் பணிகள் குறித்து அரசு அலுவலா்களுடன் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்ட திருமயம் தொகுதி தோ்தல் பாா்வையாளா் எரிக் லல்லவம்புயா.
Updated On :18 மார்ச் 2026, 6:59 pm

தினமணி செய்திச் சேவை

திருமயம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பொன்னமராவதியில் தோ்தல் பாா்வையாளா் எரிக் லல்லவம்புயா புதன்கிழமை முகாமிட்டு தோ்தல் பணிகள் குறித்து அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.

திருமயம் மற்றும் ஆலங்குடி பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் பாா்வையாளராக எரிக் லல்லவம்புயா நியமிக்கப்பட்டுள்ளாா். இதைத் தொடா்ந்து புதன்கிழமை திருமயம் தொகுதிக்குள்பட்ட பொன்னமராவதிக்கு வந்த தோ்தல் பாா்வையாளா் எரிக் லல்லவம்புயா தோ்தல் பணிகள் குறித்து பல்வேறு துறைசாா்ந்த அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா். இதில் திருமயம் தொகுதி தோ்தல் அலுவலா் திருமால், பொன்னமராவதி வட்டாட்சியா் பழனிச்சாமி, திருமயம் வட்டாட்சியா் வரதராஜன், வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.