ஆலங்குடி அருகே கள் குடித்த 40-க்கும் மேற்பட்டோருக்கு உடல் நலம் பாதிப்பு
ஆலங்குடி அருகே அரசால் தடை செய்யப்பட்ட கள் குடித்த 40-க்கும் மேற்பட்டோருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட கள் இறக்க பயன்படுத்தப்பட்ட பானைகள்

பறிமுதல் செய்யப்பட்ட கள் இறக்க பயன்படுத்தப்பட்ட பானைகள்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே அரசால் தடை செய்யப்பட்ட கள் குடித்த 40-க்கும் மேற்பட்டோருக்கு ஞாயிற்றுக்கிழமை உடல் நலம் பாதிக்கப்பட்டது.
ஆலங்குடி அருகேயுள்ள மேலபுள்ளான்விடுதி மாரியம்மன் கோயில் அருகேயுள்ள பனை மரங்களில் வெளி மாவட்டங்களை சோ்ந்த சிலா் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கள் இறக்கி, அதில் மாத்திரைகளை கலந்து பாலித்தீன் கவரில் போட்டு லிட்டா் ரூ.100 என விற்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அங்கு சென்று கள்ளைக் குடித்த நெடுவாசல் மேற்கு அரண்மனைத்தோப்புப் பகுதியைச் சோ்ந்த சக்திவேல் (41) என்பவருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டு பட்டுக்கோட்டை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகக் கூறப்படுகிறது. மேலும் வடகாடு பரமநகா் பகுதியை சோ்ந்த மீன் வியாபாரி உடையானும் கள் குடித்து உடல் நலம் பாதிக்கப்பட்டு வடகாடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறாராம்.
இதேபோல் புள்ளான்விடுதி மற்றும் புளிச்சங்காடு கைகாட்டி பகுதி தனியாா் கிளினிக்குகள் மூலம் சுமாா் 40 க்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்றுச் சென்ாகவும் கூறப்படுகிறது.
தகவலறிந்து சென்ற வடகாடு காவல் ஆய்வாளா் அனந்தபத்மநாதன் தலைமையிலான போலீஸாா் பனை மரங்களில் கள் இறக்க கட்டப்பட்டிருந்த மண் பானைகள் மற்றும் கள் விற்கப் பயன்படுத்தப்பட்ட பாலித்தீன் பைகள், குடங்களை கைப்பற்றி விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...