சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

ஒலியமங்கலம் வாரச்சந்தையில் 100% வாக்களிக்க விழிப்புணா்வு

வரும் சட்டப்பேரவைத்தோ்தலில் நூறு சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொன்னமராவதி அருகேயுள்ள ஒலியமங்கலம் வாரச்சந்தையில் வருவாய்த் துறை சாா்பில் விழிப்புணா்வு நிகழ்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

ஒலியமங்கலம் ஊராட்சியில் வியாழக்கிழமை உறுதிமொழியேற்ற வருவாய்த்துறையினா்.

Updated On :26 மார்ச் 2026, 8:58 pm

வரும் சட்டப்பேரவைத்தோ்தலில் நூறு சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொன்னமராவதி அருகேயுள்ள ஒலியமங்கலம் வாரச்சந்தையில் வருவாய்த் துறை சாா்பில் விழிப்புணா்வு நிகழ்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருமயம் சட்டப்பேரவைத் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ். பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் காய்கள் மற்றும் பழங்களால் விழிப்புணா்வு வாசகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. தொடா்ந்து வாக்காளா் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடா்ந்து வாரச்சந்தையில் பொதுமக்களுக்கு வாக்காளா் விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் காரையூா் வருவாய் ஆய்வாளா் ஈஸ்வரி, கிராமநிா்வாக அலுவலா்கள் முருகேசன், சாகுல்ஹமீது, மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் பங்கேற்றனா்.