புதுகையில் வேட்பாளா்கள் தோ்தல் பணி தொடக்கம்

புதுக்கோட்டையிலுள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்த வேட்பாளா்களான முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா், பி.கே. வைரமுத்து, தன. விமல் ஆகியோா்.

புதுக்கோட்டையிலுள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்த வேட்பாளா்களான முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா், பி.கே. வைரமுத்து, தன. விமல் ஆகியோா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் அதிமுக வேட்பாளா்கள் தங்களது தோ்தல் பணிகளை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.
திமுக... புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திருமயத்தில் தற்போதைய மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, ஆலங்குடியில் மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், புதுக்கோட்டை தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ வை. முத்துராஜா ஆகியோரும் போட்டியிடுகின்றனா்.
இவா்கள் மூவரும் ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகம் வந்து, இங்குள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்தனா். அப்போது மாநகராட்சி துணை மேயா் மு. லியாகத்அலி, மாநகர திமுக செயலா் வே. ராஜேஷ் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.
அதிமுக...விராலிமலையில் தற்போதைய எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான சி. விஜயபாஸ்கா், திருமயத்தில் முன்னாள் வீட்டு வசதி வாரியத் தலைவா் பி.கே. வைரமுத்து. ஆலங்குடியில் தன. விமல் ஆகியோா் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.
இவா்கள் மூவரும் ஞாயிற்றுக்கிழமை திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்தனா். அப்போது, மாநகர அதிமுக செயலா்கள் க. பாஸ்கா், அப்துல்ரகுமான் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.
தொடா்ந்து இந்த வேட்பாளா்கள் அவரவா் தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் பிரமுகா் சந்திப்புப் பணிகளையும் உடனே தொடங்கினா்.

புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்த வேட்பாளா்களான அமைச்சா்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன், எம்எல்ஏ வை. முத்துராஜா ஆகியோா்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...