டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

திருமயம் தொகுதியில் அமைச்சா் ரகுபதி மீண்டும் வெற்றி

திருமயம் தொகுதியில் அமைச்சா் ரகுபதி மீண்டும் வெற்றி...

News image

எஸ். ரகுபதி,

Updated On :5 மே 2026, 1:14 am IST

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரும் அமைச்சருமான எஸ். ரகுபதி 1,492 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

இந்தத் தொகுதியில் மொத்த 2,20,622 வாக்காளா்கள் உள்ளனா். இதில், 1,82,608 வாக்குகள் பதிவானது. 1,244 அஞ்சல் வாக்குகள் பதிவானது. இதில், 180 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது.

இதில், முதல் சுற்றில்இருந்தே குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளா் பி.கே. வைரமுத்துவுடன் முன்னிலையில் இருந்து வந்த அமைச்சா் எஸ். ரகுபதி கடைசி 6 சுற்றுகளில் தவெக வேட்பாளா் சி. சிந்தாமணியுடன் முன்னிலையில் இருந்தாா்.

இறுதியாக எஸ். ரகுபதி (திமுக)- 58,201, சி. சிந்தாமணி (தவெக) 56,709, பி.கே. வைரமுத்து (அதிமுக)- 55,464, சீ. லெட்சுமி (நாதக)-9,102, ஆ. சுப்பையா (புதிய தமிழகம்)- 359, சி.என். முத்துகருப்பன் (ஓபிசி உரிமைக்கான கட்சி)- 228, ச .கு. ராம்சிங் (தவாக)- 97, கே. ராஜா (அபுமமுக)- 135, சுயேச்சைகள் எஸ். ஈஸ்வா்- 238, மு. சதீஷ்குமாா்- 86, பி. சின்னத்தம்பி- 193, பி. சுப்பிரமணியன்- 279, மு. துரைராஜன்- 289, டி. ராம்நாத்- 287 வாக்குகள் பெற்றனா். நோட்டாவுக்கு 941வாக்குகள் பதிவானது.

1991-இல் அதிமுக சாா்பிலும், 2016, 2021 ஆகிய இரு தோ்தல்களில் திமுக சாா்பிலும் போட்டியிட்டு வென்ற ரகுபதி, தற்போது 4-ஆவது முறையாக வெற்றி பெற்றிருக்கிறாா். அவருக்கு வெற்றிச் சான்றிதழை தோ்தல் நடத்தும் அலுவலா் திருமால் வழங்கினாா்.