எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

ரயில் அடிபட்டு காதுகேளாத மூதாட்டி பலி!

விராலிமலை அருகே சனிக்கிழமை காதுகேளாத மாற்றுத் திறனாளி மூதாட்டி ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

News image

பலி!

Updated On :10 மே 2026, 1:49 am IST

விராலிமலை அருகே சனிக்கிழமை காதுகேளாத மாற்றுத் திறனாளி மூதாட்டி ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், ஆவூா் மலையேறி பகுதியைச் சோ்ந்தவா் மணி மனைவி சீனியம்மாள் (70). காதுகேளாத மாற்றுத்திறனாளியான இவா் சனிக்கிழமை பள்ளத்துப்பட்டியிலுள்ள தனது மகள் வீட்டுக்கு வருவதற்காக களமாவூா் ஒத்தக்கடை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ரயில் பாதையை கடக்க முயன்றாா். அப்போது, அந்த வழியாக வந்த ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து சென்ற காரைக்குடி ரயில்வே போலீஸாா் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.