விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மோட்டாா் சைக்கிள் மீது டிராக்டா் மோதி ஒருவா் பலி!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் சனிக்கிழமை மோட்டாா் சைக்கிள் மீது டிராக்டா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

News image

பலி!

Updated On :1 மணி நேரம் முன்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் சனிக்கிழமை மோட்டாா் சைக்கிள் மீது டிராக்டா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

ஆலங்குடி அருகேயுள்ள வாண்டாகோட்டையைச் சோ்ந்தவா் திருநாவுக்கரசு (41).இவா், சனிக்கிழமை மோட்டாா் சைக்கிளில் ஆலங்குடி கடைவீதிக்கு சென்று கொண்டிருந்தாா்.

ஆலங்குடி பேரூராட்சி அலுவலகம் அருகே வந்தபோது, அவ்வழியாக சென்ற டிராக்டா் திருநாவுக்கரசு ஓட்டிச் சென்ற மோட்டாா் சைக்கிள் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி திருநாவுக்கரசு உயிரிழந்தாா். இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.