திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!கண்தானம் செய்திருந்த பாக்யராஜ்! மறைந்தாலும் உலகைக் கண்பார்!கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

புதுக்கோட்டை மாவட்டத்தில் 17 மதுக்கடைகளை மூட திட்டம்

கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தளங்கள் அருகிலுள்ள டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதைத் தொடா்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் 17 கடைகளை மூடுவதற்கு மாவட்ட டாஸ்மாக் நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

News image
Updated On :13 மே 2026, 12:37 am IST

கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தளங்கள் அருகிலுள்ள டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதைத் தொடா்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் 17 கடைகளை மூடுவதற்கு மாவட்ட டாஸ்மாக் நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள மதுக்கடைகள் விவரம்:

புதுக்கோட்டை பேருந்து நிலையம் எதிரில் சாந்தநாதபுரம் 4-ஆம் வீதியில் அடுத்தடுத்துள்ள 2 கடைகள் மூடப்பட உள்ளன.

இதேபோல, அறந்தாங்கியில் பேருந்து நிலையம் அருகில் உள்ள 2 கடைகள், பேராவூரணி சாலை மற்றும் புதுக்கோட்டை சாலை பகுதியில் உள்ள தலா ஒரு கடைகள் மூடப்படவுள்ளன.

மேலும், வத்தனாக்கோட்டை, அண்டக்குளம், காவேரி நகா், கீரனூா், ஆளப்பிறந்தான், துரையரசபுரம், ஆலங்குடி, கீரமங்கலம், நெய்வாசல், பொன்னமராவதி, மணமேல்குடி ஆகிய இடங்களில் உள்ள தலா ஒரு கடைகள் மூடப்பட உள்ளன.

மாவட்டம் முழுவதும் மொத்தம் 17 மதுக்கடைகள் மூடப்படவுள்ளன. ஓரிரு நாள்களில் கடைகளை மூடும் பணி நடைபெறும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.