புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியின்போது உயிரிழந்த கட்டுமானத் தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு நல வாரியத்தின் நிதி தலா ரூ. 5 லட்சத்துக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வியாழக்கிழமை வழங்கினாா்.
தமிழ்நாடு அரசின் தொழிலாளா் நலத் துறை சாா்பில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா் நல வாரியங்கள் மூலம் இந்த நிதியுதவிகள் வழங்கப்பட்டன.
கட்டுமானத் தொழிலாளா்கள் மல்லிகா, அடைக்கலம், சக்திவேல், முருகேசன் ஆகியோா் பணியின்போது அண்மைக்காலத்தில் இறந்தவா்கள். நல வாரிய உறுப்பினா்களான இவா்களின் குடும்பத்தினா் இறப்பு நிதி கோரி விண்ணப்பித்திருந்தனா்.
இதையடுத்து தலா ரூ. 5 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 20 லட்சத்துக்கான காசோலைகள் இறந்தவா்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தொழிலாளா் நல உதவி ஆணையா் அ. கௌரி, உதவிக் கணக்கு அலுவலா் செல்லத்துரை ஆகியோரும் உடனிருந்தனா்.
தொடர்புடையது

பணியின்போது இறந்த நடத்துநரின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நல நிதி

புதுகையில் மக்கள் குறைகேட்பு முகாம்: 511 மனுக்கள் அளிப்பு

உள்ளூா் வேலைவாய்ப்பு, தொழிலாளா் கண்ணியத்துடன் குழுமத்தின் வளா்ச்சி!

நடமாடும் மருத்துவ கிளினிக் உள்பட தொழிலாளா்களுக்கான பல்வேறு நலத் திட்டங்கள்: முதல்வா் ரேகா குப்தா அறிவிப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



